உள்நாடு

ஜனாதிபதியின் மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தி

(UTV | கொழும்பு) –  இறுதி தூதரான நபி முஹம்மத்(ஸல்) அவர்களை பிரதிபலிக்கும் முகமாக அவரை நினைவு படுத்தி முஸ்லிம்கள் மீலாத் தினத்தை கொண்டாடுகின்றனர்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வாழ்த்துச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

நபி பெருமானார் மனித குலத்திற்காக செய்த அர்ப்பணிப்புக்களை முன்னுதாரணமாகக் கொண்டு வாழ்வது சிறந்ததோர் அபிவிருத்தியடைந்த சமூகத்திற்கான அத்திவாரமாக அமையும் என்பது தமது நம்பிக்கையென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கொவிட்-19 தொற்றுக்கு மத்தியில் முழு மனித சமூகமும் பெரும் சவாலை எதிர்கொள்கிறது. இத்தகைய பின்பலத்தில் ஆன்மீக நம்பிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து வாழ்வது உள அமைதியைப் பெற்றுத் தரும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் மீலாத் தின வாழ்த்துச் செய்தியை விடுத்துள்ளார். நபிகள் பெருமானார் வாழ்நாள் முழுவதிலும் பேணிய குண நலன்களும், அவர் மனிதர்களுக்காகச் செய்த அர்ப்பணிப்புகளும் அளப்பரியவை. அவரது பிறந்த தினத்தை நினைவுகூரும் முஸ்லிம் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதில் தாம் மகிழ்ச்சியடைவதாக பிரதமர் கூறியுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலுத் திட்ட 2ம் வாசிப்பு மீதான விவாதம் இன்று

இலங்கை மருத்துவ சபையின் நடவடிக்கைகளை கண்காணிக்க குழு

ரூ.1,000 பெறுமதியான நிவாரண பொதி வேலைத்திட்டம் ஆரம்பம்