சூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் உத்தரவுக்கு எதிரான மனு மீதான இன்றைய விசாரணை நிறைவு

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான இன்றைய விசாரணை நிறைவுக்கு வந்துள்ளது.

இந்த மனுக்கள் மீதான மேலதிக விசாரணை நாளை மீண்டும் இடம்பெற உள்ளதாக  நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

பிரதம நீதியரசர் நளின் பெரேரா உள்ளிட்ட பிரியந்த ஜெயவர்த்தன, பிரசன்ன ஜயவர்தன, சிசிர டி ஆப்ரு, விஜித் மாலல்கொட, புவனேக அலுவிஹாரே மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய ஏழு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

 

 

 

 

 

Related posts

நான்கு நீர்த்தேக்கங்களில் வான் கதவுகள் திறப்பு

ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து தடை

கிணற்றில் விழுந்து இரண்டு சிறுவர்கள் பலி