வகைப்படுத்தப்படாத

ஜனாதிபதியிடம் ரூபா 25 கோடி பெறுமதியான காணி அன்பளிப்பு

(UDHAYAM, COLOMBO) – களுபோவில போதனா மருத்துவமனைக்கு அன்பளிப்பான காணி உறுதிப் பத்திரத்தினை இந்திராணி த கொஸ்தா மற்றும் கமலா த கொஸ்தா ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்தனர்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதி குறித்த காணி உறுதிப்பத்திரத்தினை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கையளித்தார்.

காலஞ்சென்ற கல்கெவல கெதர சந்ராவதி , திருமதி. இந்திராணி த கொஸ்தா மற்றும் திருமதி. கமலா த கொஸ்தா ஆகியோருக்கு சொந்தமான தெஹிவல, களுபோவில, வைத்தியசாலை வீதி, இலக்கம் 205 எனும் முகவரியில் அமைந்துள்ள சுமார் 25 கோடி ரூபா பெறுமதியான 40 பர்ச்சஸ் காணியே இவ்வாறு களுபோவில போதனா மருத்துவமனைக்காக அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவ கலாநிதி ஜயசுந்தர பண்டார, களுபோவில போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி அசேல குணவர்தன உள்ளிட்டோர். கலந்துகொண்டனர்.

Related posts

“Premier says CID cleared allegations against me” – Rishad

எயார் – இந்தியா விமானம், 130 பயணிகளுடன் விபத்து…

அரச முகாமைத்துவ சேவையில் புதிதாக மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வருடத்தில் இணைப்பு