அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் முன்னிலையில் இருக்கிறார் – நாமல் தெரிவிப்பு.

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸ அவர்களே தற்போதைக்கு முன்னிலையில் இருக்கிறார்” என, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ முதன் முறையாக பகிரங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளதுடன், அதனை அறிவித்துள்ளார்.

அத்துடன், “எமது பிரதான எதிர்த்தரப்பு சஜித் பிரேமதாஸ அவர்களே.

எம்மிடமிருந்து பிரிந்து சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்ல” என்றும், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பாராளுமன்றத்தில் கிரிக்கெட் விளையாட்டு தொடர்பாக கருத்துக்களை முன்வைத்தமை குறித்து, நாமல் ராஜபக்ஷவுக்கு கோபம் மேலிட்டதாகவும் தெரியவருகிறது.

“கால நேரத்தை வீணாக்கியதாகவும், தற்போது எல்லோரும் சேர்ந்து, பாராளுமன்றத்தில் சஜித்தின் வாயை மூடுவதற்கு முயற்சிப்பதாகவும்” நாமல் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

– ஐ. ஏ. காதிர் கான்

Related posts

கொழும்பில் முச்சக்கரவண்டியினுள் இருந்து சடலம் ஒன்று மீட்பு

அழிக்கப்பட்ட குரல் பதிவுகளின் அறிக்கை இரகசியப் பொலிஸாரிடம்

 “அகதி” என்ற அவப்பெயருடன் வந்தவர்களுக்கு கௌரவத்தை பெற்றுக்கொடுப்பதில், மக்கள் காங்கிரஸ் பெரும்பணி ஆற்றியுள்ளது’