சூடான செய்திகள் 1

ஜனாதிபதித் தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் திங்களன்று

(UTV|COLOMBO) – எதிர்வரும் நவம்பர் மாதம் 16ம் திகதி இடபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளை நவம்பர் மாதம் 18ம் திகதி மதியம் 12.00 மணியளவில் வெளியிட எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய தெரிவித்துள்ளார்.

எனினும் இம்முறை ஜனாதிபதி வேட்பாளர்களின் தொகை அதிகரித்தமையினால் தேர்தல் தொடர்பான இறுதி முடிவினை தேர்தல் நடைபெற்ற மறுநாள் வெளியிடுவது சிரமமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உறுதிப்படுத்தப்படாத தேர்தல் தொடர்பான முடிவுகளை சமூக ஊடகங்கள் வெளியிடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related posts

ஜனாதிபதி, ஜனாதிபதி செயலகத்தில்

ஊழல்வாதிகளுக்கு தமது ஆட்சியில் பதவிகள் வழங்கப்பட மாட்டாது – சஜித்

பஸ் கட்டணம் குறைக்கப்படுகிறது…