சூடான செய்திகள் 1

சொந்த சகோதரியை வன்புணர்விற்கு உட்படுத்தி வந்த ஒருவர் கைது

(UTV|COLOMBO)-தனது சொந்த சகோதரியை பல வருடங்களாக வன்புணர்விற்கு உட்படுத்திவந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தும்மலசூரிய இஹல வீரகொடியான பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான இளைஞர் 16 வயதுடைய அவரது சகோரியை இவ்வாறு வன்புணர்விற்கு உட்படுத்தி வந்துள்ளார்.

பின்னர் , குறித்த சிறுமி சம்பவம் தொடர்பில் தமது பாடசாலையின் ஆசிரியை ஒருவருக்கு அறிவித்துள்ளார்.

அதன்படி , குறித்த ஆசிரியை காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் , சந்தேகநபரான சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் சுமார் 6 வருட காலமாக குறித்த சிறுமியை இவ்வாறு வன்புணர்விற்கு உட்படுத்தி வந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குளியாபிட்டி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் , விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குளியாபிட்டி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் , விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

கொழும்பு – கண்டி வீதி மற்றும் இராஜகிரிய பகுதிகளில் கடும் வாகன நெரிசல்

பாகிஸ்தானுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியினால் அம்புலன்ஸ் வழங்கி வைப்பு!