உள்நாடு

சைக்கிள் ஓட்டிகள் பாதுகாப்பு ஹெல்மெட் அணிய அறிவுறுத்தல்

(UTV | கொழும்பு) – சைக்கிள் ஓட்டுபவர்கள் பாதுகாப்பு தலைக்கவசம் அணியுமாறு இலங்கை காவல்துறை எச்சரித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட இதனை தெரிவித்தார்.

இரவு நேரத்தில் சைக்கிள் பயன்படுத்தும்போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்தும் அவர் விளக்கினார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை சைக்கிள் ஓட்ட சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி அமல் ஹர்ஷ டி சில்வாவும் கலந்துகொண்டார்.

மக்கள் மத்தியில் துவிச்சக்கர வண்டி பாவனையை மேலும் பிரபலப்படுத்தும் நோக்கில் எதிர்வரும் ஜுலை மாதம் 2ஆம் திகதி துவிச்சக்கர வண்டிப் பேரணி நடத்தப்படவுள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related posts

பயங்கரவாத தடைச்சட்டத்தை மறுசீரமைத்து அடிப்படைச் சுதந்திரத்தை உறுதிப்படுத்துங்கள் – சர்வதேச நாடுகள்

சோசலிசம் குறித்து கதைக்கின்ற அநுர ரணிலோடு பெரிய டீல் செய்திருக்கிறார் – சஜித்

editor

PCR மற்றும் ANTIGEN பரிசோதனைகளுக்கு விலை நிர்ணயிப்பு