சூடான செய்திகள் 1

சேனா படைப்புழுவைக் கட்டுப்படுத்த 5 வகையான கிருமிநாசினிகள்

(UTV|COLOMBO)-பயிர்செய்கைகளை அழித்து வரும் சேனா படைப்புழுவை ஒழிப்பதற்காக பல்வேறு தரப்பினரால் பரிந்துரைக்கப்பட்டுள்ள 15 வகையான படைப்புழு ஒழிப்பு முறைமைகளை விவசாய நிலங்களுக்கு பயன்படுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுயதயாரிப்பின் மூலம் சில விவசாயிகள், படைப்புழுவை ஒழிப்பதற்கான முறைமைகளை முன்வைத்துள்ளதாகவும் படைப்புழு ஒழிப்புப் பிரிவின் பிரதானி அநுர விஜேதுங்க கூறியுள்ளார்.

இவற்றினை பரிசோதனைக்குட்படுத்தி, விவசாய காணிகளுக்கு பயன்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் படைப்புழு ஒழிப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, படைப்புழுவைக் கட்டுப்படுத்துவதற்காக 5 வகையான கிருமிநாசினிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

இவற்றின்மூலம் படைப்புழு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் படைப்புழு ஒழிப்புப் பிரிவின் பிரதானி அநுர விஜேதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

நாடு கடத்தப்பட்ட மொஹமட் ஜபீர் விசாரணைகளின் பின்னர் விடுதலை…

பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல்களாகப் பதவியுயர்வு

போதைப்பொருள் ஒழிப்பில் வெற்றிகரமான பெறுபேறுகள் கிடைத்துள்ளது