கேளிக்கை

செல்லப்பிராணிக்கு ரூ.40000ல் ஜாக்கெட் வாங்கிய நடிகை

நடிகைகள் சிலர் தங்கள் செல்லப்பிராணியான நாய்க்கு கொஞ்சம் ஓவராகவே செல்லம் காட்டுகின்றனர். முத்தமிட்டு கொஞ்சுவது, கட்டிப்பிடித்து தூங்குவது, மடியில் வைத்து விளையாடுவது என பொழுதை கழிப்பதுடன் அதற்கொன பிரத்யேக ஏசி அறை, குஷன் பெட் வரை எல்லா வசதிகளும் செய்து தருகின்றனர்.
நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்க காதலர் நிக் ஜோனஸை சமீபத்தில் மணந்தார். அவருடன் லாஸ் ஏஞ்சல்ஸில் குடியேறியிருக்கிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்ல நாய்க்குட்டியுடன் கொஞ்சும் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் பிரியங்கா. விலை மதிப்பு மிக்க அந்தநாய்க்குட்டிக்கு மாத சம்பளத்துக்கு ஸ்பெஷல் ஹேர் ஸ்டைலிஸ்ட்டை அமர்த்தியிருப்பதுடன் லாஸ் ஏஞ்சல்ஸில் தாங்க முடியாதளவுக்கு குளிர் வீசுவதால் சிறப்பு ஜாக்கெட் ஒன்றையும் தைத்து அணிவித்திருக்கிறார். அந்த ஜாக்கெட்டின் விலை மட்டுமே சுமார் 40 ஆயிரம் ரூபாய் ஆகும். நாய்க்குட்டிக்கு டயானா சோப்ரா எனவும் பெயரிட்டிருக்கிறார்.

 

 

 

Related posts

நடிகர் நகுலுக்கு வாரிசு

மைக்கேலுடன் திருமணமா?

அம்மாவுக்கு ராக்கி கட்டிய ஸ்ருதி…