உள்நாடு

செலவினங்களை மட்டுப்படுத்த அமைச்சுகளுக்கு அறிவுறுத்தல்

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கான செலவுகளை மேலும் கட்டுப்படுத்துமாறு நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

ஒருங்கிணைக்கப்பட்ட நிதியிலிருந்து எரிபொருள் கொடுப்பனவுகளைப் பெறும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களின் எரிபொருள் செலவினங்களை மட்டுப்படுத்தவும் அது வலியுறுத்தியுள்ளது.

மேலும், தொலைபேசி மற்றும் மின்சார செலவுகள் போன்ற அரச நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் அனைத்து செலவுகளையும் கண்டிப்பாக கட்டுப்படுத்துமாறு நிதியமைச்சகம் கோரியுள்ளது.

இது தொடர்பில் நிதியமைச்சகம் ஏற்கனவே அனைத்து அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் தொடர்ச்சியான சிறப்பு அறிவுறுத்தல்களை அனுப்பியுள்ளது.

டிசம்பர் 21-ஆம் தேதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையிலும், ஜனவரி 12-ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசின் செலவினங்களைக் கட்டுப்படுத்தும் சுற்றறிக்கையிலும் உள்ள உத்தரவுகளை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள திட்டங்களைத் தவிர வேறு எந்த திட்டங்களுக்கும் நிதி கோருவதைத் தவிர்க்குமாறு அனைத்து அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு நிதியமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

Related posts

இன்றும் பல மாவட்டங்களில் மழை

சீரற்ற வானிலை காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை திறப்பு

editor

காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும் – மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

editor