விளையாட்டு

சென்னையை வீழ்த்தியது டெல்லி

(UTV | துபாய்) -44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.

சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடைபெற்றது.

நாணய  சுழற்சியில் வென்ற சென்னை களத்தடுப்பை தேர்வு செய்தது. இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 175 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

இதையடுத்து, 176 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.

இறுதியில் சென்னை அணி 7 விக்கெட் இழப்புக்கு 131 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி அணி 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது டெல்லி அணியின் இரண்டாவது வெற்றி ஆகும்.

Related posts

SLC உப தலைவர் கே. மதிவாணன் இராஜினாமா

சங்கக்கார குழுவினால் வடமாகாண மக்களுக்கு நிதியுதவி

வைரலாக பரவும் ஹர்பஜனின் வீடியோ… (VIDEO)