விளையாட்டு

சூரியவௌ மைதானம் புனரமைப்பு

(UDHAYAM, COLOMBO) – ஹம்பாந்தோட்டை சூரியவௌ மைதானத்தை புனரமைக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கை சுற்றுத்தொடருக்குரிய சிம்பாப்வே அணியின் ஒருநாள் சர்வதேச போட்டியொன்று சூரியவௌ மைதானத்தில் நடைபெறவுள்ளது.

குறித்த போட்டி நடைபெறுவதற்கு முன்னதாக மைதானத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறதென்று ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மைதானம் சுமார் ஆறு வருடங்களுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்டதாகும். இதில் கடந்த இரு வருடங்களாக எந்த போட்டிகளும் இடம்பெறவில்லை.

மேலும் குறித்த மைதானத்தை பராமரிக்க வருடாந்தம் ஒரு கோடி 80 இலட்சம் ரூபாவை செலவிட வேண்டியிருப்பதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

பங்களாதேஷை வீழ்த்திய தென்னாபிரிக்கா

ஆஸி முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஸ்லேட்டர் கைது

சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா