கேளிக்கை

‘சூரரைப்போற்று’ கை விடப்பட்டது

(UTV |  இந்தியா) – இறுதிச்சுற்று படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடித்த படம் சூரரைப்போற்று. விமான துறையில் சாதனை படைத்த கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி உருவான படம் . விமர்சகர்களிடம் இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. ஓடிடி தளத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தென்னிந்திய படமாக சாதனை படைத்தது. சூர்யா தயாரித்த இந்தப் படம் ஆஸ்கர் விருது வரைக்கும் சென்று வந்தது.

இந்த படம் இந்தியில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வந்தது. சுதா கொங்கராவே இந்தியில் இயக்குவதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது இந்த படம் வெளிவந்த அமேசான் ப்ரைம் டைம் நிறுவனம், படத்தை உதான் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து ஓடிடி தளத்தில் வெளியிடுகிறது. வருகிற 4ம் தேதி முதல் இந்த படத்தின் இந்தி பதிப்பை அமேசான் ப்ரைம் வீடியோவில் பார்க்கலாம். இதன் மூலம் சூரரைப்போற்று இந்தி ரீமேக் முயற்சி கைவிடப்பட்டது உறுதியானது.

Related posts

சூர்யாவுக்காக லண்டன் பறந்த ஹாரிஸ் ஜெயராஜ்

பலரின் கண்களை பறித்த ஸ்ருதி

பிரியங்கா சோப்ரா மனிதாபிமான விருதுக்கு தெரிவு