கேளிக்கை

சுஷாந்தின் தோழி ரியா சக்ரபர்த்தி மீது முறைப்பாடு

(UTV|இந்தியா)- மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தோழி ரியா சக்ரபர்த்தி மீது, சுஷாந்தின் தந்தை பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார்.

கடந்த ஜூன் 14-ம் தேதி சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள அவரது வீட்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இவரின் தற்கொலை பாலிவுட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொள்ள அவரது தோழி ரியா சக்ரபர்த்தி தூண்டியதாக சுஷாந்த் குடும்பத்தினர் தற்போது குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும், சுஷாந்தை மன ரீதியாகத் துன்புறுத்தியதாகவும் ரியா மீது பீகார் பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ரியா மீது தற்கொலைக்குத் தூண்டியது உட்பட பல்வேறு பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரஜினியை நேரில் சந்தித்த குத்துச்சண்டை வீராங்கனை

உங்கள் UTV இப்பொழுது TikTok இலும்

‘எங்க தளபதி பத்தி உனக்கு என்ன தெரியும்’-கோபமாகி சண்டை போட்ட பிரபல நடிகை