உள்நாடு

சுற்றுலா பயணிகளுக்கு மதுபானங்களை பெற்றுக் கொள்ள புதிய வழி

(UTV | கொழும்பு) – உரிமம் இன்றி சுற்றுலா பயணிகளுக்கு மதுபானம் வழங்கப்படும் இடங்களில் மென் மதுபானங்களுக்கு கலால் உரிமம் வழங்கும் புதிய முறைமை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அந்நியச் செலாவணி நெருக்கடியைத் தீர்ப்பதில் உள்ளூர் சுற்றுலாத் துறையை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், தொழில்துறையினரிடம் இருந்து பெறும் ஆதரவையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளுக்கு உணவளிக்கும் உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் விருந்தினர் மாளிகைகளுக்கு இந்தப் புதிய முறையை அமுல்படுத்தவும் அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது.

புதிய முன்மொழியப்பட்ட முறையின் கீழ், சுற்றுலாப் பயணிகளுக்கு பீர் மற்றும் ஒயின் விற்பனை, சுற்றுலாப் பயணிகளுக்கு உணவு மற்றும் தங்குமிடங்களை வழங்குவதற்காக ஏற்கனவே வணிகப் பதிவு பெற்ற உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் மற்றும் விருந்தினர் விடுதிகளுக்கு கலால் உரிமம் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஒரு வாரத்திற்கு முன்பு கொழும்பு சென்று இரு இராஜதந்திரிகளை சந்தித்த நீதிபதி – சரவணராஜா.

உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான மனுக்கள் விசாரணைக்கு …

இன்று மின் வெட்டு இடம்பெறாது