வகைப்படுத்தப்படாத

சுற்றுலா தலமாக மாறிய இந்தியாவிலுள்ள உலகின் மிக உயர் அஞ்சலகம்

(UTV|INDIA) இந்தியாவில்  உள்ள உலகிலேயே மிக உயரமான அஞ்சலகத்தை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்கின்றனர்.இமாச்சல பிரதேசத்தின் ஹிக்கிம் கிராமம் அதிக மலைகளை கொண்ட, சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் இடமாகும்.

இப்பகுதியில் 14 ஆயிரத்து 567 அடி உயர மலையின் உச்சியில் அஞ்சலகம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.

மேற்படி இந்த அஞ்சலகம் தான் உலகிலேயே மிக உயரிய அஞ்சலகம் எனும் பெருமையைக் கொண்டுள்ளது. இந்த அஞ்சலகத்தை காண உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

மேலும் சுற்றுலா பயணிகள் இயற்கையை ரசிக்க நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், இந்த அஞ்சலகம் மிகுந்த இயற்கை அழகுடன் மேலோங்கி காணப்படுகின்றது எனவும் இங்கு வருகை தரும் தெரிவிக்கின்றனர்.

 

 

 

 

 

 

Related posts

எத்தியோப்பிய பிரதமருக்கு அமைதிக்கான நோபல் பரிசு

பரிஸ் ஒப்பந்தத்துக்கு மேலும் உயிர்கொடுப்பு

ஜப்பானில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக 84 பேர் காயம்