உள்நாடுசூடான செய்திகள் 1

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று

(UTV|கொழும்பு)- ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கட்சியின் தலைமையகத்தில் இன்று(16) இடம்பெறவுள்ளது.

கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்றிரவு 7 மணியளவில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் பொது தேர்தல் மற்றும் தற்போதைய அரசியல் நிலை குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக சுதந்திரக் கட்சியின் ஊடாகப் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் கட்சியின் விதிமுறைகளுக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கான ஒழுக்காற்று நடவடிக்கை குறித்தும் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

சில சேவைகளை நடாத்திச் செல்ல அரசு அனுமதி

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

நாடாளுமன்றில் ஒழுக்க கோவையை மீறினால் உறுப்புரிமை நீக்கும் சட்டம்- நீதியமைச்சர்