உள்நாடுசூடான செய்திகள் 1

சுசந்திகா ஜெயசிங்க அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் குடியேறத் தீர்மானம்

இலங்கையின் நட்சத்திர தடகள வீராங்கனையும், 2000 சிட்னி ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவருமான சுசந்திகா ஜெயசிங்க, தனது இரண்டு குழந்தைகளுடன் அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் குடியேறத் தீர்மானித்துள்ளார்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு இலங்கையை விட்டு வெளியேறிய அவர், நாடு திரும்புவது குறித்து நிச்சயமற்ற நிலையில் இருப்பதாக நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

அவுஸ்திரேலியாவிற்கு அவர் இடம்பெயர்வது, அவரது குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்திற்கு முன்னுரிமை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சுசந்திகாவின் சமகால தடகள வீராங்கனையும், ஆசியப் பதக்கம் வென்றவரும், ஒலிம்பியனுமான தமயந்தி தர்ஷாவும் சில ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றார்.

49 வயதான சுசந்திகா ஜயசிங்க 100 மற்றும் 200 மீற்றர் போட்டிகளில் நிபுணத்துவம் பெற்ற ஓய்வு பெற்ற இலங்கை ஓட்டப்பந்தய வீராங்கனை ஆவார்.

அவர் 2000 சிட்னி ஒலிம்பிக்கில் 200 மீ ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார், டங்கன் வைட்டிற்குப் பிறகு ஒலிம்பிக் பதக்கம் வென்ற இரண்டாவது இலங்கையர் என்ற பெருமையையும், ஸ்பிரிண்ட் போட்டியில் ஒலிம்பிக் அல்லது உலக சாம்பியன்ஷிப் பதக்கத்தை வென்ற முதல் ஆசியப் பெண்மணியும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டில் நாளாந்த மின் வெட்டு தொடரும் சாத்தியம்

14 மாதங்களில் 157% அதிகரித்துள்ள மின் கட்டணம்!

இன்று பிற்பகல் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவருடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடல்