உள்நாடு

சுகாதார பணியாளர்களின் கொடுப்பனவுகளைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை?

இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் சுகாதார பணியாளர்களின் கொடுப்பனவுகளைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

தமது பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு ஒரு வாரம் காலவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.

உரிய கலந்துரையாடலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபடுவோம் என்று நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியத்தின் செயலாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.

இதவேளை, இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடைக்கவில்லை என்று கல்வி வல்லுனர்கள் சங்கத்தின் தவிசாளர் உலபனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

Related posts

தில்ருக்‌ஷி டயசுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

ICC பந்துவீச்சு தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய மஹீஷ் தீக்ஷன

editor

இதுவரை 836 கடற்படையினர் குணமடைந்தனர்