வகைப்படுத்தப்படாத

சுகாதார , கல்வி மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு

(UDHAYAM, COLOMBO) – சுகாதாரம் மற்றும் கல்வித் துறை மேம்பாட்டுக்காக அரசாங்கம் பாரிய தொகையை ஒதுக்கீடு செய்திருப்பதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் நேற்று இந்த விடயத்தை அமைச்சர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம், பேராதனை, ரஜரட்டை, ஜயவர்த்தனபுர, சப்ரகமுவ, வடமேல் மற்றும் திறந்த பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களின் 14 அடிப்படை அபிவிருத்தித் திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது.

இதற்காக 31 பில்லியனுக்கு மேற்பட்ட தொகை அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 2018 தொடக்கம் 2020ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இந்தத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஸ்ரீ ஜயவர்த்தனபுர, அனுராதபுரம், மட்டக்களப்பு உள்ளிட்ட போதனா வைத்தியசாலைகளின் அபிவிருத்தி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

விவசாய உற்பத்தி தொழில்நுட்ப உயர்; தேசிய டிப்ளோமா கற்கை நெறி

ஜப்பான்: போனின் தீவில் இன்று நிலநடுக்கம்

சட்டவிரோதமாக குப்பை கொட்டிய 400ற்கு மேற்பட்டோர் கைது