உள்நாடு

சுகாதாரப் ஊழியர்களுக்கு இன்று முதல் 74 நிரப்பு நிலையங்கள் மூலம் எரிபொருள்

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

எரிபொருளைப் பெறுவதற்குத் தேவையான சுகாதாரப் பணியாளர்கள் தாங்கள் பணிபுரியும் மருத்துவமனை நிர்வாகத்தில் பதிவு செய்ய வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று முதல், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பதிவு செய்யப்பட்ட சுகாதார ஊழியர்களுக்கு மட்டுமே எரிபொருள் நிரப்பப்படும்.

இது தேர்ந்தெடுக்கப்பட்ட 74 நிரப்பு நிலையங்கள் மூலம் செய்யப்படுகிறது.

Related posts

தொற்றிலிருந்து மீண்டோர் எண்ணிக்கை 11,000 ஐ கடந்தது

பாராளுமன்றத்தில் இன்று முக்கிய ஒப்பந்தம் கைச்சாத்து

அனுமதிப் பத்திரம் அற்ற ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு காலக்கெடு