உள்நாடு

சீரற்ற வானிலையால் 207,582 பேர் பாதிப்பு – இருவர் பலி – 7 பேரை காணவில்லை

நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக 59,629 குடும்பங்களைச் சேர்ந்த 207,582 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த அனர்த்தத்தினால் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உதய ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காணாமல் போயுள்ளனர்.

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக 06 வீடுகளுக்கு முழுமையான சேதங்களும், 335 பகுதி வீடுகளும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் அறிவித்தல்

ரஷ்யாவிடமிருந்து 50,000 Sputnik V வந்தடைந்தது

ஷவ்வால் தலைப்பிறை தென்பட்டது ; நாளை புனித நோன்புப் பெருநாள்