கிசு கிசு

சீன கப்பல் ஒன்று திடீரென இலங்கைக்கு

(UTV | கொழும்பு) –   பழுதடைந்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலை மீட்க சீனக் கப்பல் இலங்கைக்கு வருகிறது

இலங்கை கடற்பரப்பில் தீயினால் அழிக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் சிதைவுகளை மீட்பதற்காக சீனக் கப்பல் ஒன்று இன்று (19) அல்லது நாளை (20) இலங்கைப் பெருங்கடலுக்கு வரவுள்ளதாக கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்தக் கப்பல் இலங்கைப் பெருங்கடலில் பல மாதங்கள் இருக்கும் என்றும், கப்பல் அகற்றப்படும் என்றும் அதன் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்தார்.

இதேவேளை, கப்பலில் தீப்பற்றியதையடுத்து சிதறிய 1700 மெற்றிக் தொன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு நீர்கொழும்பு, பமுனுகமவிற்கு அருகில் உள்ள கழிவு சேமிப்பு முற்றத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இரு தரப்பினரும் ஒப்புக்கொண்ட ஆய்வகங்களில் கழிவுகள் பிரிக்கப்பட்டு பரிசோதிக்கப்படும் என்றும் அதன் பின்னர் அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் திருமதி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்தார்.

Related posts

பவி’யின் அனுமதியின்றி ‘ஸ்புட்னிக்-5’ இலங்கை வராதாம்

எரிபொருட்களை கடனாக வழங்க IOC நிபந்தனை

டிசம்பர் இறுதியில் பொது முடக்கம்