உலகம்

சீனாவில் வெள்ளம் – மில்லியன் கணக்கான மக்கள் பாதிப்பு

(UTV|சீனா) – சீனாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக சுமார் 38 மில்லியன் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனாவின் ஜியாங்சி, அன்ஹுய், ஹூபே மற்றும் ஹுனான் மாகாணங்கள் உட்பட 27 பிராந்தியாங்களில் ஏற்பட்ட இந்த வெள்ளத்தால் 37.9 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 2.25 மில்லியன் மக்கள் தங்கள் சொந்த இடங்களிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக நாட்டின் மாநில வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் வறட்சி நிவாரண தலைமையகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத‍ேவேளை சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் குடிமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

Related posts

பரிதாபமாக உயிரிழந்த குழந்தைகள் – தடை செய்யப்பட்ட மருந்துகள்!

அமெரிக்காவை அச்சுறுத்தும் ஒமிக்ரோன்

6 மாதங்களுக்குப் பிறகு தாஜ்மஹால் மீண்டும் திறப்பு