உலகம்

சீனாவில் விமான சேவைகள் இடைநிறுத்தம்

(UTV|சீனா) – சீனத் தலைநகர் பீஜிங்கில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியதை அடுத்து அங்கு சுமார் 1,255 விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனத் தலைநகர் பீஜிங்கில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியிருப்பது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சீனா தலைநகர் பீஜிங்கில் உள்ள சந்தைக்கு சென்று வந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதனால் சந்தையில் இருந்த 500க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பீஜிங்கிற்கு சுற்றுலா வர தடை விதிக்கப்பட்டுள்ளதோடு அங்குள்ள சில பகுதிகளில் ஊரடங்கு நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டன.

Related posts

பிரான்ஸ், இத்தாலியை தாக்கிய ‘அலெக்ஸ்’ புயல்

கொரோனா வைரஸ் – உலக அளவில் உயிரிழப்பு 60 ஆயிரத்தை கடந்தது

அஜித் ஓட்டிச் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியது -அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்

editor