உலகம்

சீனாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 19 பேர் பலி

(UTVNEWS | சீனா ) – சீனாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 18 தீயணைப்பு வீரர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள சிச்சாங்கில் பண்ணை ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ, பலத்த காற்றின் காரணமாக அருகில் உள்ள மலைப்பகுதிக்கும் வேகமாகப் பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இதில் சிக்கிய அங்குள்ள கிராமத்தைச் சேர்ந்த வழிகாட்டி ஒருவரும், தீயணைப்பு வீரர்கள் 18 பேரும் உயிரிழந்தனர்.

தீயை அணைக்கும் பணியில் 2,000கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

பல்பொருள் அங்காடியில் தீ – 3500 பேர் வெளியேற்றம்

6 மாதங்களுக்குப் பிறகு தாஜ்மஹால் மீண்டும் திறப்பு

இலங்கையில் நீதியும் பொறுப்புக்கூறலும் இல்லை – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கவலை.