கிசு கிசு

சீனாவில் இருந்து இறப்பர் அரிசா?

(UTV | கொழும்பு) – சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் இருந்து சோறு சமைத்து அதனை உருண்டையாக்கி எறிந்தால் அது ரப்பர் பந்து போன்று மேல் நோக்கி செல்வதனை காணொளியில் பார்த்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஒரு ஹெக்டேர் நெல் வயல்களுக்கு 137 கிலோ யூரியாவும், சீனாவில் 525 கிலோவும், இந்தியாவில் 250 கிலோ யூரியாவும் பயன்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார்.

இலங்கையைப் போன்று மூன்று நான்கு மடங்கு உரமிடும் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி நஞ்சற்ற உணவை எமக்குத் தருகிறதா என கேள்வி எழுப்பினார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

Related posts

டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு?

அலரி மாளிகைக்குள் ஆயுத களஞ்சியங்கள்-அதன் பாதுகாப்பு ஆபத்தில்?

இலங்கை மக்களுக்கான மகிழ்ச்சித் தகவல்!!!