உள்நாடு

சீனாவிலுள்ள இலங்கை மாணவர்கள் இலங்கை தூதரகம் கோரிக்கை

(UTV|சீனா) – இலங்கைக்கு திரும்ப சீனாவிலுள்ள இலங்கை மாணவர்கள் எவரும் விரும்புவார்களாயின் அவ்விடயம் தொடர்பாக அறிவிக்குமாறு பீஜீங்கிலுள்ள இலங்கை தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.

சீனாவில் தங்கியிருந்த 700க்கும் மேற்பட்ட மாணவர்கள், இலங்கைக்கு திரும்பிச் சென்றுள்ளதாக பீஜிங்கிலுள்ள சீனாவுக்கான பதில் தூதுவர் கே.கே.யோகநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும் சீனாவில் தங்கியிருக்கும் மாணவர்கள், சீன சுகாதார பிரிவினர் வழங்கும் ஆலோசனைகளை பின்பற்றுமாறு அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்று ஒரே நாளில் சீனாவில் 80இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 803 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

பல்வேறு மாவட்டங்களில் 16 கொரோனா நோயாளர்கள் அடையாளம்

ஜிங்கங்கை முகத்துவாரத்தில் குளிக்கச் சென்ற இரு மாணவர்கள் பலி

புரட்சிகர மாணவர் ஒன்றியத்தின் செயற்குழு உறுப்பினர் மங்கள மத்துமகே கைது