உள்நாடுசூடான செய்திகள் 1

சீனாவிலிருந்து 48 மணி நேரத்தில் 150 மாணவர்கள் இலங்கைக்கு

(UTVNEWS | COLOMBO) –சீனாவில் உள்ள சுமார் 150 இலங்கை மாணவர்கள் அடுத்த 48 மணி நேரத்தில் இலங்கை வருவார்கள் என ஜனாதிபதி ஊடகம் தெரிவித்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவி வரும்  வுஹான் மற்றும் சிச்சுவான் மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களையும் உடனடியாக திருப்பு அனுப்புமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஸ பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை, வுஹான் மாநிலத்தில் இருந்து வௌியேறுவதற்கும் மற்றும் உள்நுழைவதற்கும் தற்போதைய நிலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த தடையை நீக்கி உடனடியாக அங்கிருக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வர அனைத்து சட்ட ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related posts

ஆசிரியர்களுக்கு நேர்முகத் தேர்வு!

யாருக்கு ஆதரவு? – நாளை இறுதித் தீர்மானம்

மிரிஹான கலவரம் : 150க்கும் மேற்பட்டவர்களிடம் CID வாக்குமூலம்