உலகம்

சீனாவின் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் வழமைக்கு

(UTV | சீனா) – கொரோனா வைரசால், சீனாவில் மூடப்பட்டிருந்த பாடசாலைகள் திறக்கப்பட்டும் விமான போக்குவரத்துகளும் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவின், வூஹான் நகரில், முதல் முதலாக கொரோனா வைரஸ் உருவாகி, மற்ற நாடுகளுக்கு பரவியது.

இதனால், கடந்தாண்டு டிசம்பரில் இருந்து, சீனாவில், ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

வூஹான், பீஜிங், ஷாங்காய் ஆகிய முக்கிய நகரங்களில், அனைத்து விதமான போக்குவரத்தும் முடங்கியது. பாடசாலைகள், கல்லுாரிகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன.

கடந்த ஒரு மாதமாக வைரஸ் பாதிப்பு கணிசமாக குறையத் ஆரம்பித்ததை அடுத்து, பாதிப்பு அதிகம் உள்ள நகரங்களை தவிர, மற்ற நகரங்களில் கடைகள் திறக்கப்பட்டன.

சீனாவின் வர்த்தக தலைநகரமாக கருதப்படும் ஷாங்காயில், நேற்று முதல், உயர் நிலை பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் ஆரம்பித்துள்ளன.

ஷாங்காயிலிருந்து உள்நாட்டு விமான போக்குவரத்தும் ஆரம்பித்துள்ளது.

முதலில் குறைந்த அளவில் இயங்கிய விமானங்கள், தற்போது, 60 சதவீதம் அளவுக்கு இயங்குகின்றன.

கோடை விடுமுறை காலம் என்பதால், அடுத்த சில நாட்களில், பொழுதுபோக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும், சுற்றுலா தலங்களையும் திறக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.

மற்றொரு புறம், நேற்று புதிதாக ஐந்து பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை, 82 ஆயிரத்து, 947 ஆக அதிகரித்துள்ளது; பலி எண்ணிக்கை, 4,634 ஆக உள்ளது.

Related posts

உக்ரைன் விவகாரத்தில் முழுமையான போரை விரும்பவில்லை

ஹிஜாப்புக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 92 பேர் பலி

ரஷ்ய மற்றும் பிரேஸில் தனக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை