வகைப்படுத்தப்படாத

சிவனுக்குரிய மகா சிவராத்திரி விரதம் இன்று அனுஷ்டிப்பு

(UTV|COLOMBO)-இந்துக்களால் கடைப்பிடிக்கப்படும் சிவனுக்குரிய மகா சிவராத்திரி விரதம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதி இரவில் இந்த விரதம் கடைப்பிடிக்கப்படும்.

இந்த நாளின் சிறப்புகள் குறித்து கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாசிமாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாலேயே இந்த நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.

பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டநிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள்.
நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள்.
பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, தாம் பூசித்த இந்த இரவை, தேவர்களும் மனிதர்களும் சிவராத்திரி என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள்.
இதன்படி சிவராத்திரி உருவானதாக புராணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் – மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை சிவனை பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சம் அளிக்கப்படும் என்பது நம்பிக்கை.

இதேவேளை , ஐம்பொறிகளின் வழியே மனதை அலையவிடாது அதனை ஐக்கியப்படுத்தி, இறைசிந்தனையுடன் இந்துக்களால் அனுஸ்டிக்கப்படும் விரதங்களுள் மகா சிவராத்திரி விரதம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தினத்தில் உலகெங்கும் சமாதானம் ஏற்பட வேண்டும் என பிரார்திப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்

மானிட சமூகத்தினை நல்வழிப்படுத்தும் சமய நம்பிக்கையையும் சமூக விழுமியப் பண்புகளையும் மென்மேலும் மக்களிடையே வேரூன்றச் செய்யும் வகையில் மகா சிவராத்திரி அமைய வேண்டும் என ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ வெளியிட்டுள்ள சிவராத்திரி விரத வாழ்த்து செய்தியில், இன, மத பேதமின்றி ஒவ்வொருவரினதும் கலாசார, மத விழுமியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய நாளில் அனைத்து சிவனடியாளர்களது வாழ்விலும் சுபீட்சம் ஏற்பட வேண்டும் என பிரதமர் அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

பிரதமா் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக சீனா சென்றடைந்தார்

Heavy traffic near Nelum Pokuna, Green Path

LVMH boss Bernard Arnault overtakes Bill Gates as world’s second-richest person