உள்நாடு

சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை

(UTV | கொழும்பு) – ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வரை வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

ஈஸ்டர் தாக்குதல் ராஜபக்ஷவுக்கு விசுவாசமான இலங்கை அதிகாரிகள் உடந்தை – செனல் 4 வெளியிடப்போகும் செய்தி

துறைமுக அதிகாரசபை அத்தியாவசிய சேவையாக பிரகடனம்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழக மாணவர்கள் 6 பேர் விளக்கமறியலில்