சூடான செய்திகள் 1

சிறுவர் மீதான துன்புறுத்தல் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-சிறுவர்கள் மீதான துன்புறுத்தல் அதிகரித்து வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

வருடத்தின் 6 மாத காலத்திற்குள், துன்புறுத்தல் தொடர்பில் 4,831 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சபையின் பணிப்பாளர் நாயகம் அனோமா சிறிவர்தன குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர்களைத் துன்புறுத்துவது தொடர்பில் 1,201 முறைப்பாடுகளும் வன்கொடுமை தொடர்பில் 581 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், துன்புறுத்தல்கள் தொடர்பில் பதிவுசெய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால் பெற்றோ​ர் தமது பிள்ளைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிள்ளைகளுக்கு 18 வயதாகும் வரை, அவர்களைப் பாதுகாப்பது பெற்றோர்களின் கடமையாகும் என தேசிய சிறுவர் பாதுாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தேசிய மின் கட்டமைப்பிற்கு களுகங்கை செயற்திட்டத்தினூடாக 25 மெகாவோட் மின்சாரம்

பொது மக்கள் நன்கொடை – வீடுகளுக்கு சென்று வழங்கும் நடவடிக்கை நாளை முதல்

நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பில் நடுநிலை