வகைப்படுத்தப்படாத

சிறுவர் நிலையத்திற்கு தீ வைப்பு

(UTV|NUWARA ELIYA)-நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா மாக்கஸ் தோட்டபகுதியில் உள்ள சிறுவர் நிலையத்திற்கு இனந் தெரியாதவர்களால் தீ வைக்கபட்டுள்ளதாகவும் தீ வைப்பு சம்பவ செய்தி சேகரிக்க சென்ற பத்தனை பிரதேசத்தில் உள்ள ஊடகவியலாளர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ வைப்பு சம்பவம் நேற்று திங்கட்கிழமை (12) இரவு இடம்பெற்றதாக நுவரெலியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை தீ வைக்கபட்ட சிறுவர் நிலையத்தில் உள்ள அனைத்து உபகரணங்களும் எரிந்து சாம்பளாகி உள்ளதாக தும்பு சேரிப்பு நிலையத்தில் உள்ள இயந்திரங்களும் சேதமாகியுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்

குறித்த தோட்டப் பகுதியில் உள்ள சிறுவர் பாரமரிப்பு நிலையத்திற்கு தீ வைக்கப்பட்டதினால் சிறுவர் நிலையத்திற்கு முன்பாக அமைக்கபட்ட நீர் இறைக்கும் இயந்திரம் ஒன்று முற்றாக எரிந்துள்ள நிலையில் அந்த தோட்டபகுதி மக்களுக்கு குடிநீரை பெற்று கொள்வதில் பெறும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் அம் மக்கள் தெரிவித்தனர் .

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இரு பெண்கள் பலி

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு கோரிக்கை

Sudan junta and civilians sign power-sharing deal