கிசு கிசு

சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச தினம் இன்று அனுஷ்டிப்பு

(UTV|COLOMBO)  சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

சமுதாயத்தில் சிறுவர்களின் வருங்காலத்தை கட்டியெழுப்பும் தேவை அனைவருக்கும் உண்டென்ற வகையில், அவர்களுக்கு மிக முக்கியமாகத் தேவைப்படும் அடிப்படை விடயமான கட்டாயக் கல்வியை வழங்குதல் அவசியமானதாகும்.

ஒவ்வொரு குழந்தையும் கட்டாயக் கல்வி பெறும் உரிமையுடையவர்களாக விளங்குகின்றனர். அவர்கள் தங்களது புதிய கனவுகளை அடைய வாய்ப்புகளை வழங்க வேண்டியது அனைவரதும் கடமையாகும்.

எந்தவொரு சிறுவரையும் தொழிலாளர்களாக யாராவது பயன்படுத்தினால் அவர்களுக்கு எதிராக, அருகில் உள்ள பொலிஸ் நிலையம் அல்லது 1929 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து முறையிட முடியுமென்பதுடன், இம்முறை 9,000 வரையான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

 

 

Related posts

பசில் ராஜபக்ஷ தான் ஜனாதிபதி வேட்பாளர்?

வெடிப்புச் சம்பவம் தொடர்பில் நான் அறிந்திருக்கவில்லை-பிரதமர்

கங்கை நதியில் மிதக்கும் கொரோனா சடலம் (PHOTO)