வகைப்படுத்தப்படாத

சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவோர் – தகவல்களை வழங்குங்கள்

(UDHAYAM, COLOMBO) – சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவோர் தொடர்பான தகவல்களை வழங்குமாறு தேசிய சிறுவர் அதிகார சபையின் தலைவி சட்டத்தரணி மரீனி டி சில்வா பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கை சிறுவர் தொலைபேசி சேவைக்கு அல்லது அருகாமையில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு இது தொடர்பான தகவல்களை வழங்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்

.இலங்கை சிறுவர் தொலைபேசி இலக்கம் 1919 ஆகும்.

கிடைக்கப்பெறும் அனைத்து முறைப்பாடுகளும் தொழில் திணைக்களம், பொலிசாருடன் இணைந்து அதிகாரசபை விசாரணைகளை மேற்கொள்ளும்.  சிறுவர்களை தொழில்களில் ஈடுபடுத்தும் நபர்;களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தலைவி தெரிவித்தார்.

Related posts

கேரளாவில் பெய்து வரும் கனமழையினால் 11 அணைகள் திறப்பு

வவுனியாவில் கோர விபத்து – இரு இளைஞர்கள் பலி

Sri Lanka likely to receive light showers today