விளையாட்டு

சிறிய மாற்றங்களை செய்தேன் – சனத் ஜயசூரிய.

தான் பதில் பயிற்றுவிப்பாளராக ஆன பின்னர் தேசிய அணியின் ஒழுக்கம் தொடர்பில் சில சிறிய மாற்றங்களைச் செய்ததாக சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சனத் ஜயசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பத்திரிக்கையாளர் “சனத், நீங்கள் பயிற்சியாளராக ஆன பிறகு, வீரர்களின் முடியை வெட்டுமாறும்..

காதணிகளை கழற்றுமாறும் அறிவித்துள்ளதாக அறிந்துள்ளோம்.. அதேபோன்று..டெட்டூவை அகற்றவும் யோசனை உள்ளதா?”

சனத் ஜெயசூர்யா “நாங்கள் சாதாரண விடயங்களைச் செய்கிறோம். நீங்கள் சொல்வது போல் இல்லை. ஒழுக்கம் கொஞ்சம் கவனிக்கப்படுகிறது. நான் ஒரு இடைக்கால பயிற்சியாளர். நான் 02 தொடர்களுக்கு மாத்திரே இருக்கிறேன்.

நான் இருக்கும் போது அந்த ஒழுக்கம் எனக்கு இருக்க வேண்டும். சிறிய கிரிக்கெட் வீரர்கள் பெரியவர்களை பார்க்கிறார்கள். அவர்களை பார்த்தே சிறியவர்கள் கற்கின்றனர்.

நல்ல விடயங்களைச் செய்தால், அது வளர்ந்து வருபவர்களுக்கு நன்றாக இருக்கும். அதனை அவதானித்தே சிறிய மாற்றங்களை செய்தேன்” என்றார்.

Related posts

பிரபல ஸ்கேட்டிங் வீரர் டெனிஸ் டென் கொடூர கொலை

குசல் மென்டிஸ் வைத்தியசாலையில் அனுமதி

ICN சம்பியன் போட்டியில் இலங்கைக்கு பதக்கம்