உள்நாடு

சிறப்பு சுற்றிவளைப்பு – பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள ஆயுர்வேத மசாஜ் நிலையங்கள் முற்றுகை – 33 பேர் கைது

சிறப்பு சுற்றிவளைப்பின் போது பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட ஆயுர்வேத மசாஜ் நிறுவனங்கள் என்ற போர்வையில் இயங்கும், ஆறு விபசார விடுதிகளில் 20 பெண்கள் உட்பட 33 பேர் கைது செய்யப்பட்டதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் மசாஜ் நிலையங்களில் தங்கியிருந்த மூன்று ஆண்கள் அடங்குவதாகவும் சட்டவிரோத மதுபானம் மற்றும் ஐஸ் வைத்திருந்த ஒருவரும் அத்துடன் வரி இல்லாமல் இறக்குமதி செய்யப்பட்ட 1,425 சிகரெட்டுகளை வைத்திருந்த ஒரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்ற வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில், திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த ஆயுர்வேத வைத்தியர்களைக் கொண்ட அரசாங்கப் பதிவு செய்யப்பட்ட மசாஜ் நிறுவனங்கள் எனக் கூறி, வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்தும் விளம்பரப் பலகைகளை சட்டவிரோதமாக காட்சிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பேருந்தை திருடிச் சென்ற நபர் கைது.

சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட தேக்கமரப் பலகைகளையும், பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் கைப்பற்றிய பொலிஸார்

editor

‘கெசல்வத்த ஃபவாஸ்’ கொலை