வகைப்படுத்தப்படாத

சிரியாவில் 9 பேர் பலி

(UTV|SYRIA)-சிரியாவின் அஃப்ரின் நகரத்தில், மரக்கறிச் சந்தையொன்றில் வைத்து, காரொன்று வெடித்துச் சிதறியதில், குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டனர். நேற்று முன்தினம் (16) மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல், அஃப்ரினின் நிலைமை, இன்னமும் வழக்கமானதாக மாறவில்லை என்பதைக் காட்டுகிறது.

துருக்கியால் ஆதரவளிக்கப்படும் போராளிகளால் கட்டுப்படுத்தப்படும் அஃப்ரினில் நடத்தப்பட்ட இத்தாக்குதல், குர்திஷ்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என, துருக்கித் தரப்புச் சந்தேகிக்கிறது. இந்நகரம், குர்திஷ்களிடமிருந்து இவ்வாண்டு மார்ச்சில் கைப்பற்றப்பட்டிருந்தது.

 

 

 

 

Related posts

கடும் வாகன நெரிசல்

வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

பாடசாலைக்குள் கத்தி குத்து தாக்குதல்