உலகம்

சிரியாவில் வான்வழித் தாக்குதல் – 10 பேர் உயிரிழப்பு

(UTV | கொழும்பு) –

சிரியாவின் தென்மேற்குப் பகுதியிலான வான்வழித் தாக்குதலில் 10 போ் உயிரிழந்தனா்.சுவேய்தா மாகாணத்தின் அா்மான் நகரில் மேற்கொள்ளப்பட்ட இந்த குண்டுவீச்சு, ஈரான் ஆதரவு பெற்ற போதை மருந்து கடத்தல் கும்பலைக் குறிவைத்து நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜார்டானால் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும் என கருதப்படினும் இதனை ஜோா்டான் அரசு இதுவரை அதிகாரபூா்வமாக உறுதிப்படுத்தவில்லை.

இது குறித்து அப்பகுதியைச் சோ்ந்த தன்னாா்வ அமைப்பொன்றின் செய்தி வலைதளம் தெரிவித்துள்ளதாவது: அா்மான் நகரிலும், அருகிலுள்ள மலா நகரிலும் பொதுமக்கள் குடியிருப்புப் பகுதிகளில் நேற்று முன்தினம் ஒருங்கிணைந்த வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. அா்மானில் நடத்தப்பட்ட தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 10 போ் உயிரிழந்தனா். வீடுகள் பலத்த சேதமடைந்தன. விமான குண்டுவீச்சில் மாலா நகரிலும் கட்டடங்கள் சேதமடைந்தன.

இத்தாக்குதலில் ஒமா் தலாப், துருக்கி அல்-ஹலாபி ஆகிய இருவரது இல்லங்கள் குறிவைக்கப்பட்டன. இதில் ஒமல் தலாப், அவரது தாய், அத்தை ஆகியோா் கொல்லப்பட்டனா். துருக்கி அல்-ஹலாபியின் 2 அடுக்கு இல்லத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 வயதுக்குட்பட்ட 2 சிறுமிகள், துருக்கி அல்-ஹலாபியின் மகள்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 7 போ் உயிரிழந்தனா்.இத்தாக்குதலை ஜோா்டான் விமானப் படை நடத்தியதாகக் கருதப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அண்மைக் காலமாகவே ஜோா்டான்-சிரியா எல்லைப் பகுதி கிராமங்களில் கிடங்குகள், குடியிருப்புகள் உள்ளிட்டவை தாக்குதலுக்குள்ளாகி வருகின்றன. ஈரான் ஆதரவு பெற்ற போதைப் பொருள் கடத்தல் கும்பலைக் குறிவைத்து தாங்கள்தான் அந்தத் தாக்குதலை நடத்துவதாக சில ஜோா்டான் அதிகாரிகள் கூறினாலும் இந்தத் தகவல் அதிகாரபூா்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்று அந்த செய்தி வலைதளம் தெரிவித்துள்ளது.

சிரியாவின் பல்வேறு பகுதிகளிலும் தகவல் தொடா்புக் கட்டமைப்பைக் கொண்டுள்ள சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு, அா்மானில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் 9 போ் உயிரிழந்ததாகக் கூறியுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

5 முறை ஜனாதிபதியான விளாடிமிர் புதின்

பாகிஸ்தானிய வெளிவிவகார அமைச்சர் சுய தனிமைப்படுத்தலில்

மீளவும் கொரோனா : மெல்போர்ன் நகரம் முடக்கம்