சூடான செய்திகள் 1

சின்னம்மை நோய்க்கு ஒப்பான வைரஸ் – சுகாதார அமைச்சு

(UTV|COLOMBO)  சிறுவர்கள் மத்தியில் சின்னம்மை நோய்க்கு ஒப்பான வைரஸ் ஒன்று பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளதுடன் இந்த வைரஸ் காரணமாக, முதல்நாள் காய்ச்சல் காணப்படுவதுடன், பின்னர் சிறுவர்களின்  உடலில் நீர்த்தன்மையான கொப்புளங்கள் மற்றும் சிவப்பு நிறத்திலான தழும்புகளும் ஏற்படும் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

வாய், கரம் மற்றும் கால்களில் இந்த நோய் பரவுகிறது.இவை 3 நாட்கள் வரையில் காணப்படும்.
எனினும் சிலருக்கு அதன் பின்னரும் இந்த கொப்புளங்கள் நீடிப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும், அவ்வாறு நீடிக்கும் பட்சத்தில் விட்டமின்கள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

முதலாவது பாராளுமன்ற தெரிவுக்குழுக் கூட்டம் இன்று

கடும் குளிரான காலநிலை…

அங்கொடை வீதியின் போக்குவரத்து பாதிப்பு