உள்நாடுசூடான செய்திகள் 1

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் அமைச்சரவை தீர்மானம்

(UTV|கொழும்பு)- சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான செயன்முறைப் பரீட்சையை தனியார் துறையினரும் மேற்கொள்வதற்கு கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தை இரத்து செய்து, செயன்முறைப் பரீட்சையை அரச துறையினர் மாத்திரம் மேற்கொள்வதற்கு அனுமதிக்குமாறு மோட்டார் போக்குவரத்து பரிசோதகர்கள் சங்கத்தினால் துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கைக்கு அமைய, சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான செயன்முறைப் பரீட்சையை தனியார் பிரிவினரும் மேற்கொள்வதை இரத்து செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

2 மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய யோஷித ராஜபக்ஷ CID யில் இருந்து வௌியேறினார் | வீடியோ

editor

மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் குறித்து நாளை தீர்மானம்

“வன்னித் தலைவனை விடுதலை செய்” – வவுனியாவில் மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் [VIDEO]