உள்நாடு

சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் – மீலாத் விழா நிகழ்வுகள்.

(UTV | கொழும்பு) –

உலகுக்கு அருட்கொடையாக வந்துதித்த நபிகள் நாயகத்தின் பிறந்தநாளான இன்று புனித மீலாத்தை முன்னிட்டு சாய்ந்தமருது கலாச்சார மத்தியநிலையமும், சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய்யா கலாபீடமும் இணைந்து நடத்திய “நபிகளாரை நேசிப்போம் – மீலாத் விழா” நிகழ்வுகள் சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலைய பொறுப்பதிகாரி யூ.எல்.எம். ரிம்ஸானின் நெறிப்படுத்தலில் சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய்யா கலாபீட அதிபர் தலைமையில் சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலையத்தில் இன்று காலை நடைபெற்றது.

சாய்ந்தமருது கலாச்சார மத்தியநிலைய பிரதி செயலாளர் யூ.எல்.என். ஹுதா உமர் தொகுத்து வழங்கிய சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய்யா கலாபீட மாணவர்களின் கலை, கலாச்சார நிகழ்வுகளும், நபிகளாரின் வாழ்வு தொடர்பிலான உரைகளும் இடம்பெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முஆபிகா கலந்து கொண்டதுடன் சாய்ந்தமருது பிரதேச செயலக நிதி உதவியாளர் எம்.சி. முஹம்மட், சாய்ந்தமருது ஜும்மா பெரியபள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் ஏ. ஹிபத்துள் கரீம், செயலாளர் எம்.ஐ.எம். மன்சூர், சாய்ந்தமருது பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் ஏ.எம். பர்ஹான், சாய்ந்தமருது கலாச்சார உத்தியோகத்தர் ஏ.எச். சபீகா, சாய்ந்தமருது பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் எஸ். சுரேஷ், தஃவா இஸ்லாமிய்யா கலாபீட செயலாளர் ஐ.எல்.ஏ. இப்ராஹிம், தஃவா இஸ்லாமிய்யா கலாபீட ஆசிரியர்கள், சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலைய உறுப்பினர்கள், மாணவர்கள் எனபலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது பல்வேறு போட்டிகளிலும், நிகழ்வுகளிலும், பல்வேறு விடயங்களிலும் தமது திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பரீட்சைகள் திணைக்களம் தனியார் மயப்படுத்தும் தீர்மானம் இல்லை

இதுவரையில் 2,816 பேர் பூரண குணம்

கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையம் முடங்கியது