சூடான செய்திகள் 1

சாந்த அபேசேகர 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

(UTV|COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகரவை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகரவை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2004 ஆம் ஆண்டு அனுமதியின்றி இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்தமை தொடர்பில் அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்திற்கு அவருக்கு பிணை வழங்கப்பட்டிருந்த போதிலும் அதில் ஒரு பிணை நிபந்தனையாக ஒவ்வொரு ஞாயிறும் காலை 9 மணி முதல் 12 மணிக்கு உட்பட்ட காலத்தில் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

பின்னர் பிரதிவாதிகளின் தரப்பினால் மேல் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய குறித்த பிணை நிபந்தனையை மாதாந்தம் இறுதி ஞாயிறு மாத்திரம் பொலிஸில் ஆஜராகுமாறு தளர்த்தியிருந்தது.

குறித்த வழக்கு தொடர்பில் மேல்நீதிமன்றம் பொலிஸாரிடம் அறிக்கை ஒன்றை கோரியிருந்த சந்தர்ப்பத்தில் சந்தேக நபர் சில தினங்களில் பிணை நிபந்தனையை மீறியுள்ளமை தெரியவந்துள்ளது.

Related posts

FCID யை விட்டு வெளியேறிய கோட்டாபய ராஜபக்ஷ

1000 மீள்திறன்மிக்க மாணவர்களுக்கு பிரதமர் தலைமையில் சுபக புலமைப்பரிசில் வழங்கள் இன்று முதல் ஆரம்பம்

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு அபராதம் – உயர் நீதிமன்றம்