உள்நாடு

சாதாரண தர பரீட்சையில் மாணவர்களின் முறைகேடு – விசரணைகள் ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் தற்போது இடம்பெறும் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (10) முறைப்பாடுகள் செய்யவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள இரண்டு பரீட்சை நிலையங்களிலும் ஹசலக்க பிரதேசத்தில் உள்ள பரீட்சை நிலையமொன்றிலும் இந்த முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது

பரீட்சை எழுதியவர்கள் நேற்று வழங்கப்பட்ட ஆங்கில வினாத்தாளை செல்போன்களை பயன்படுத்தி படம் எடுத்து மற்ற தரப்பினருக்கு அனுப்பி விடை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த நேரத்தில் பரீட்சை நிலையங்களில் இருந்த அதிகாரிகள் கையடக்கத் தொலைபேசிகளைக் கைப்பற்றியுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன் பின்னர், பரீட்சை நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மூன்று மடங்காக அதிகரித்துள்ள பணத் தொகை – வருமானம் குறைந்தவர்களுக்கு ஜனாதிபதி செய்தி

கிழக்கு சமூக சேவை சபையினால் மாணவர்கள், கல்வியலாளர்கள் கெளரவிப்பு : பிரதம அதிதியாக ஹரீஸ் எம்.பி

வானிலை எச்சரிக்கை