சூடான செய்திகள் 1

சஹ்ரானின் சகா இந்தியாவில் கைது

(UTV|COLOMBO) இந்தியாவின் கேரளா மாநிலத்தில் தற்கொலைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த, சஹ்ரான் ஹஷிமின் சகா ஒருவர் இந்திய தேசிய விசாரணை நிறுவகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணிய சந்தேகத்தின் பேரில் தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் பலரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், கேரளா மாநிலம் பாலக்காடைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Related posts

பெற்றோல் விலை அதிகரிக்கப்பட மாட்டாது

சீனாவில் இருந்து இலங்கை மாணவர்களை அழைத்து வர நடவடிக்கை

ஐ.தே.க கட்சிக்குள் இருவேறு நிலைப்பாடு: உறுப்பினர்கள் போர்க்கொடி