வகைப்படுத்தப்படாத

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு மேலும் பத்து கோடி 72 லட்சம் அமெரிக்க டொலர் நிதியுதவி

(UDHAYAM, COLOMBO) – இலங்கைக்கு மேலும் பத்து கோடி 72 லட்சம் அமெரிக்க டொலர்களை வழங்க சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம் அளித்துள்ளது.

மூன்று ஆண்டுத் திட்டத்தின் கீழ் இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

இலங்கை முன்னெடுக்கும் பொருளாதார வேலைத்திட்டங்கள் மகிழ்ச்சி அளிப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் பதில் தலைவர் மிட்ஷூ ஹிரோ ஃபுரூஸாவா தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் பொருளாதார செயற்பாடுகள் தொடர்பான இரண்டாவது மீளாய்வை பூர்த்தி செய்துள்ளது. இதற்கமைய, இலங்கைக்கு பத்து கோடி 72 லட்சம் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவிருக்கின்றன.

கடந்த வருடம் ஜுன் மாதம் இந்த வேலைத்திட்டத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டதோடுஇ உரிய நிதிக்கான அனுமதி தற்சமயம் வழங்கப்படவுள்ளது. வரவு செலவுத்திட்டத்தின் துண்டுவிழும் தொகையை குறைத்தல்இ அந்நிய செலாவணி ஒதுக்கம் போன்ற விடயங்களுக்காக இந்த நிதி வழங்கப்படுகிறது.

Related posts

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா

අගෝස්තු 05 උසස් පෙළ – අගෝස්තු 04 වැනිදා ශිෂ්‍යත්වය

பிரபல இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹோக்கிங் மரணம்