வகைப்படுத்தப்படாத

சர்வதேசம் வரை செல்வோம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

(UDHAYAM, COLOMBO) – மருத்துவ யாப்பை மீறி மலபே தனியார் மருத்துவ கல்லுரிக்கு விருப்பமான ஒருவரை மருத்துவ சபையின் தலைவராக நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளுமாக இருந்தால், அது தொடர்பில் சர்வதேச மட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

மருத்துவ விதிகளை மீறி, மருத்துவ சபையின் தலைவரை மாற்றி, தமக்கு சார்பான ஒருவரை நியமிக்க அமைச்சர் ஒருவர் முயற்சி எடுத்துள்ளார்.

இந்த நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில், அதனால் மக்களே பாதிப்புகளை சந்திக்க நேரும்.

இதுகுறித்த தாங்கள் சர்வதேச ஒன்றியங்களில் முறைப்பாட்டை மேற்கொள்ளவும் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த விடயம் குறித்து பிரதி அமைச்சர் அஜித் பீ பெராவிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போதும், மருத்துவ சபையின் தலைவர் காலோ ஃபொன்சேகாவை விலக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், மாறாக அவரது பதவிக்காலம் நிறைவடைந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

85 வயதான அவருக்கு ஓய்வுக்குப் பின்னர் காலநீடிப்பு வழங்கப்பட்டிருந்த போதும், தற்போது இந்த பதவிக்கு பொருத்தமான ஒருவரை நியமிக்க வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

ஆஸ்கர் விருதுகள் 2018 – முழு விவரம்

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு

බි‍්‍රතාන්‍ ස්ථිරවම යුරෝපා සංගමයෙන් වෙන්වීමට සුදානම්