உள்நாடு

சர்வகட்சி மாநாடு அரசுக்கு ஆதரவளிக்கவல்ல

(UTV | கொழும்பு) –  அரசுக்கு ஆதரவளிக்க சர்வகட்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பதில் அர்த்தம் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த மாநாட்டின் மூலம் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும், அரசாங்கத்தை பலப்படுத்துவது அல்ல எனவும் தெரிவித்திருந்தார்.

தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் பொறுப்பு அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் உள்ளது என்றும் அவர் கூறினார்.

சில அரசியல் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதாகக் கூறியுள்ள நிலையில், சிலர் தமது கொள்கைகளின் அடிப்படையில் அழைப்பை நிராகரித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தமது கருத்துக்களை வெளியிடுவதற்கும் மக்களின் சுமைகளிலிருந்து விடுபடுவதற்கான வேலைத்திட்டத்தை வகுப்பதற்கும் அனைத்து தரப்புக்களையும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் கேட்டுக் கொண்டார்.

Related posts

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை 24 ஆம் திகதி திறப்பு

editor

பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான அமைச்சரவை துணைக் குழு

பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான எதுவிதமான யோசனையும் கிடையாது