சூடான செய்திகள் 1

சரத் பொன்சேகா சீ.ஐ.டி. முன்னிலையில்

(UTV|COLOMBO)-வனஜீவராசிகள் அமைச்சரான சரத் பொன்சேகா இன்று(25) குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு கடுமையாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள மேலதிக விசாரணைகளில் வாக்குமூலம் ஒன்றினை பெற்றுக் கொள்ளவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, அமைச்சர் சரத் பொன்சேகா இன்று(25) மதியம் 12 மணிக்கு குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தின் கொள்ளை தொடர்பிலான புலனாய்வு பிரிவில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுத்துள்ளதாக குறித்த திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

வேதன உயர்வு தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்

வணக்கத்திற்குரிய பல்லத்தர ஶ்ரீ சுமனஜோதி தேரர் காலமானார்

பிரதமர் மாலைத்தீவிற்கு விஜயம்